Freelancer / 2023 ஜனவரி 15 , மு.ப. 08:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொருளாதார வளத்துடன் நாட்டை மீளக் கட்டியெழுப்பவும் ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் செயற்படுவது மிகவும் அவசியமாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் தைப் பொங்கல் வாழ்த்து செய்தியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்,
சுபீட்சத்துக்கான பிரார்த்தனைகளில் ஈடுபடும் வகையில் இந்துக்களினால் முன்னெடுக்கப்படும் சடங்குகள், காலங்காலமாக இலங்கைச் சமூகத்துடன் பின்னிப் பிணைந்திருக்கிறது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
உற்பத்தித்திறன் மற்றும் செழுமையையும் குறிக்கும் இந்த ‘தைப் பொங்கல்’ தினத்தில், இலங்கையர்களாகிய நாம் அரசாங்கத்தின் புதிய பொருளாதார மற்றும் சமூக சீர்திருத்த வேலைத்திட்டத்திற்கு பங்களிக்கவும், பொருளாதார வளத்துடன் நாட்டை மீளக் கட்டியெழுப்பவும் ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் செயற்படுவது மிகவும் அவசியமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
‘தைப் பொங்கல்’ கொண்டாட்டம், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை நோக்கிய பயணத்திற்கு ஆசீர்வாதங்களை வழங்கட்டும். ‘பொங்கலின்’ ஆவி மற்றும் மரபுகளுக்கு அமைவாக, இலங்கை மக்கள் செழிக்க வெற்றி நிரம்பி வழியட்டும் என்றும் ஜனாதிபதி தைப் பொங்கல் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார். (a)
5 hours ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
18 Jan 2026