2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ஜனாதிபதி மைத்திரி புதனன்று உரையாற்றுவார்

Niroshini   / 2015 செப்டெம்பர் 24 , பி.ப. 02:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.நிரோஷினி

ஐக்கிய நாடுகளின் 70ஆவது பொது சபை கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்காக நேற்று புதன்கிழமை அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வியாழக்கிழமை நிவ்யோர்க் சென்றடைந்தார்.

ஜனாதிபதியுடன் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, மீள்குடியேற்றத்துறை அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஆகியோரும் சென்றுள்ளனர்.

இதற்கிணங்க,எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (27) இலங்கை  நேரப்படி அன்றிரவு 7.15க்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொருளாதார மாநாட்டில் உரையாற்றவுள்ள அதேவேளை, எதிர்வரும் புதன்கிழமை (30) இலங்கை  நேரப்படி இரவு 7.15க்கு பொது சபை மாநாட்டிலும் உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X