2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

ஜனாதிபதி முறை தொடரவேண்டும்

Princiya Dixci   / 2016 ஜனவரி 10 , பி.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கெலும் பண்டார

புதிய அரசியலமைப்பில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்படும் அதேவேளை, ஜனாதிபதி முறை தொடரவேண்டும் எனும் நிலைப்பாட்டை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எடுத்துள்ளது. 

தற்போதைய அரசியலமைப்பில் 13ஆவது திருத்தத்தை அமுல் செய்வதை, கட்சி ஆதரிக்கின்றது. தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்ப, அதன் குறைபாடுகள் நீக்கப்பட வேண்டுமென, கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜோன் செனவிரத்ன கூறினார். 

இது நடைபெறின், மாகாண சபைகள், கூடுதல் அதிகாரத்தை அனுபவிக்க முடியுமெனவும் அவர் கூறினார். ஜனாதிபதி முறைமை இன்றி, நாட்டின் ஒருமைத் தன்மையைப் பேணுவது கடினமாகும் எனவும் அவர் கூறினார்.

இதனால், நாட்டில் ஒருமைத் தன்மை பாதுகாப்பு, ஜனாதிபதியின் பிடி, நாடு முழுவதும் விரவியிருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதற்கு தனது கட்சி ஆதரவானது என்று அவர் கூறினார். ஒரு தனி ஆளில் பெருமளவு அதிகாரம் இருப்பதை ஏற்கமுடியாது என அவர் கூறினார். 

அரசியலமைப்பு பேரவை தொடர்பில் அரசாங்கத்தின், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி திருத்தங்களை சமர்ப்பிப்பதாக அவர் கூறினார்.

அரசியலமைப்பு பேரவைக்கு பதிலாக, முழு அவையினதும் குழு ஒன்றை நியமிக்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி விரும்புகின்றது. மேலும்  இந்த குழு அரசியலமைப்பை எழுதுவதற்கு பதிலாக ஓர் அறிக்கையை சமர்ப்பிக்கவேண்டும் என்று அவர் கூறினார்.

இந்த அறிக்கைக்கு சபையின் மூன்றிலிரண்டின் ஆதரவை பெற்று அமைச்சரவை புதிய அரசியலமைப்பை ஆக்கலாம் என்று அவர் தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பை உயர் நீதிமன்றில் தீர்மானத்துக்கு அனுப்பப்படவேண்டும் என்று அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X