2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

ஜனாதிபதியின் பிரசார மேடைக்கு வெடி வைத்த இருவர் கைது

George   / 2016 மார்ச் 15 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-துஷார தென்னகோன்
 
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொது வேட்பாளராக போட்டியிட்ட போது, அரலகங்வில பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தின் நிறைவின் போது, துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் இன்று அதிகாலை (15) 1 மணியளவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

திம்புலாகல பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் இருவரே, கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் பொலன்னறுவை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில், இன்று முற்பகல் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வருடம் ஜனவரி மாதம் 3ஆம் திகதி இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதுடன் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இன்னும் 4 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X