2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

ஜப்பான் தலைவர்களை சந்தித்தார் அநுர

Freelancer   / 2025 செப்டெம்பர் 29 , பி.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கான உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வு இன்று (29) காலை ஜப்பான் பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.

ஜப்பான் பிரதமர் அலுவலகத்திற்கு வந்த ஜனாதிபதி அநுரவை ஜப்பான் பிரதமர் அன்புடன் வரவேற்றார்.

மேலும் ஜப்பான் படையினரால் ஜனாதிபதிக்கு மரியாதை அளிக்கப்பட்டது. 

இரு நாடுகளின் பிரதிநிதிகள் குழுவும் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கும் ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவிற்கும் இடையே உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X