2025 மே 15, வியாழக்கிழமை

ஜூன் 2 வரை காலக்கெடு

R.Tharaniya   / 2025 மே 14 , பி.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்ளூராட்சி மன்றங்களில் முக்கிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களின் பெயர்களை அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் ஒரு வார காலத்திற்குள் வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றங்களில் பெரும்பான்மையைப் பெற்ற குழுக்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மேயர், துணை மேயர்,தலைவர் மற்றும் துணைத் தலைவர்பதவிகளுக்கான தங்கள் விருப்பங்களை அறிவிக்கவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்ந்தெடுக்கப்பட்டஉறுப்பினர்களின் பெயர்கள், கவுன்சில்கள் மற்றும் தொடக்க அமர்வுகளை நடத்துவதற்கு முன்பு, பிரதேச மட்டத்தில் அதிகாரப்பூர்வமாக வர்த்தமானியில் வெளியிடப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு தலைவர் ரத்நாயக்க கூறியுள்ளார்.

எந்த ஒரு கட்சியோ அல்லதுகுழுவோ பெரும்பான்மையைக் கொண்டிருக்காத கவுன்சில்களில், முக்கிய அதிகாரிகளை தேர்ந்தெடுப்பது ஜூன் 2 ஆம் திகதி நடைபெறும் முதல் கூட்டத்தின் போது வாக்களிப்பதன் மூலம் தீர்மானிக்கப்படும் என்றும் மேலும் 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலைத் தொடர்ந்து உருவாக்கப்பட்ட புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்கள், ஜூன் 2,ஆம் திகதி  அன்று  அதிகாரப்பூர்வ பதவிக் காலத்தை தொடங்க உள்ளன. என்று தேர்தல் ஆணைக்குழுதலைவர் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .