2021 மே 11, செவ்வாய்க்கிழமை

‘ஜெனீவாவில் உண்மையான பிரச்சினை வேறாகும்’

Editorial   / 2021 மார்ச் 09 , மு.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

மனித உரிமைகள் பேரவையில் முன்வைத்த யோசனையிலும் அது தொடர்பான விடயங்களிலும், இந்த அரசாங்கம் யுத்தம் தொடர்பிலேயே அதிகம் கதைக்கின்றது எனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டீ சில்வா, ஆனால், தற்போதைய அரசாங்கத்தால் முன்னெடுத்துச் செல்லப்படும் ஜனநாயக விரோத செயற்பாடு, இராணுவமயமாக்கல் தொடர்பிலேயே இந்த யோசனையில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது  என்றார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (8) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், “இந்த அரசாங்கத்தால் எப்படி சாதாரண நபர்களின் மனித உரிமைகளுக்கு எதிரான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன என்பது தொடர்பிலேயே அதிகம் பேசப்படுகின்றது” என்றார்.

யுத்தத்தின் பின்னர், இந்த நாட்டில் நல்லிணக்கம், நிலையான அமைதியை ஏற்படுத்துவதற்கான பொன்னான வாய்ப்பு, அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்குக் கிடைத்தது. ஆனால், பல வருடங்களுக்குப் பின்னர் கேட்கும் கேள்விதான், அந்தச் சந்தர்ப்பத்தை இந்த அரசாங்கம் சரியாகப் பயன்படுத்தியதா என்பதாகும்.


இன்று மனித உரிமைகள் பேரவையில் உள்ள பிரச்சினை, இலங்கையாலேயே ஏற்படுத்திக்கொண்ட பிரச்சினையாகும். கற்றுக்கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க அறிக்கையில், ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் பல பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறித்த அறிக்கையை நான் நேற்றும் வாசிதேன். அந்த அறிக்கையில், இலங்கை இராணுவம் யுத்த விதிகளை மீறினார்கள், யுத்தக் குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டார்கள் என, எந்தவோர் இடத்திலும் குறிப்பிடப்படவில்லை என்றார்.

சிலரால், சில சந்தர்ப்பங்களில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் விசாரணை செய்து, இவ்வாறான விடயங்கள் இனிமேலும் நடைபெறாமலிருக்கவும், இவ்வாறான சம்பவங்கள்  ஏற்பட்டிருந்தால் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


“ஆனால், அவற்றை உரிய முறையில் நிறைவேற்றாமையே  இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினையாகும். இதனால்தான் இன்று பலரும் பலவிதமான குற்றச்சாட்டுகளை இலங்கை மீது முன்வைக்கின்றனர்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X