2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

ஜே.எஃப் 17 விமான கொள்வனவு : தமக்கு தெரியாது என்கிறது இலங்கை விமானப்படை

Kanagaraj   / 2016 ஜனவரி 06 , பி.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானிடமிருந்து JF-17 ரக போர் விமானங்கள் எட்டைக் கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாக, பாகிஸ்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள போதிலும், அவ்வாறான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளமை பற்றித் தமக்கெதுவும் தெரியாது என, இலங்கை விமானப்படையின் குழுத் தளபதி சந்திம அல்விஸ், நேற்று புதன்கிழமை(06) தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப், உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, திங்கட்கிழமை (04) இலங்கைக்கு வருகை தந்திருந்தார்.

இவ்விஜயத்தின் போது, JF-17 ரக போர் விமானங்களை இலங்கைக்கு விற்பனை செய்யும் உடன்படிக்கையொன்றில் கையொப்பமிட்டிருந்தார் என, பாகிஸ்தானிய ஊடகங்கள்; செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன், அயல்நாடான இந்தியாவின் அழுத்தம் காணப்பட்டதாகவும், அந்த ஊடகங்கள் தெரிவித்துள்ளன

இவ்விடயம் தொடர்பில், இலங்கை விமானப்படை சார்பில் எவ்விதத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்த அவர், இது தொடர்பில் தமக்கு எதுவும் அறிவிக்கப்படவில்லை எனவும் கூறினார்.

கொள்வனவு செய்வதற்காக, சில போர் விமானங்களை ஆராய்ந்து வருவதாகவும் அதில், பாகிஸ்தானின் JF-17 ரக போர் விமானமும் அடங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X