2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

ஜி.எஸ்.பி+ உடன் பிரதமர் திரும்புவார்

Niroshini   / 2016 ஒக்டோபர் 17 , மு.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெல்ஜியத்துக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் 8 பேர் அடங்கிய குழுவினர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தினுடாக நேற்று அதிகாலை 3.15 மணியளவில், எமிரேட்ஸ் EK 349 என்ற விமானத்தில் புறப்பட்டுச் சென்றனர். 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக்காலத்தில் இரத்துச் செய்யப்பட்ட ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை மீளப்பெற்றுக் கொள்வதற்காகவே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பெல்ஜியத்துக்கு சென்றுள்ளார் என்று தகவல் வௌியாகியுள்ளது.  

குறித்த விஜயத்தின் போது, பெல்ஜிய பிரதமர் சார்ள்ஸ் மிச்செல் மற்றும் இளவரசர் லோரன்ட் ஆகியோருடன், இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பெல்ஜியத்துக்கான விஜயத்தை முடித்துக்கொண்ட பின்னர், ஹொங்கொங்குக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை, பிரதமர் மேற்கொள்ளவுள்ளார் என்று, பிரதமர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சர் சாகல ரத்நாயக்க, பிரதமரின் செயலாளர் சமன் ரத்நாயக்க, மேலதிகச் செயலாளர் சமன் அதாவுடஹெட்டி, பிரதமரின் விசேட உதவியாளர் சென்றோ பெரேரா ஆகியோர், பிரதமருடன் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .