2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

ஜோசப் பரராஜசிங்கம் கொலை விவகாரம்: 4ஆவது சந்தேகநபருக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2016 ஜனவரி 08 , மு.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்காவது சந்தேகநபரை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் மாணிக்கவாசகம் கணேசராஜா, நேற்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

குறித்த படுகொலைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த புலனாய்வுத் துறையினரால் சந்தேகத்தின் பேரில் மீரா லெப்பை கதிர் என்ற நபரை நேற்று (07) வியாழக்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X