Freelancer / 2026 ஜனவரி 17 , மு.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
மடூல்சீமை மஹதோவ தோட்டத்திற்கு சொந்தமான டெக்டர் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மடூல்சீமை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் நேற்று (16) மதியம் இடம்பெற்றுள்ளது. 43 வயதுடைய தொழிற்சாலை பிரிவு, விராளபத்தன , மடூல்சீமை பகதியை சேர்ந்த டெக்டரின் சாரதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மடூல்சீமை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பசறை மடூல்சீமை வீதியில் மாளிகாத்தன்ன 10 ஆவது கிலோமீட்டர் தூணுக்கு அருகாமையில் பீலவீதி எனும் உள்வீதியிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
விறகு ஏற்றுவதற்காக சென்ற குறித்த டெக்டர் ஒரு இடத்தில் இருந்த விறகை ஏற்றிக் கொண்டு மேலும் ஒரு இடத்தில் உள்ள விறகை ஏற்றுவதற்காக விறகுகள் இருக்கும் இடத்திற்கு உதவியாளர்கள் சென்ற போது டெக்டரின் சாரதி டெக்டரை அவ்விடத்திற்கு கொண்டு செல்ல முற்பட்ட வேளையிலேயே டெக்டர் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாகவும் இதனால் காயமடைந்த சாரதி பசறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதன் பின்னர் பசறையில் இருந்து பதுளை பொது வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
குறித்த விபத்துக்கான காரணம் டெக்டரின் பிரேக் செயல்படாமையே என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மேலதிக விசாரணைகளை மடூல்சீமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.R
31 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
2 hours ago
4 hours ago