2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

டக்ளஸுக்கு எதிரான கொலை வழக்கின் சாட்சி விசாரணை சென்னையில் ஆரம்பம்

Menaka Mookandi   / 2016 ஜனவரி 19 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிரான கொலை வழக்கின் சாட்சி விசாரணை சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ளது.

சென்னை சூளைமேட்டில் 1986ஆம் ஆண்டு நவம்பர் முதலாம் திகதியன்று, 4பேர் மீது சிலர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் வழக்குரைஞர் திருநாவுக்கரசு இறந்தார்.

இது தொடர்பாக டக்ளஸ் தேவானந்தா உட்பட 9பேர் மீது பொலிஸார் வழக்குப் பதிந்தனர். இது தொடர்பான சாட்சி விசாரணைகளே நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X