2025 டிசெம்பர் 04, வியாழக்கிழமை

’டிட்வா’ புயலால் 269 சுற்றுலாப் பயணிகள் பாதிப்பு

S.Renuka   / 2025 டிசெம்பர் 04 , பி.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டை உலுக்கிய டிட்வா புயலால் 269 சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.  (SLTDA) அறிவித்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை சுசுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை  வெளியிட்டுள்ள அறிக்கையில், 52 இந்தியர்கள் மற்றும் 40 பல்கேரிய நாட்டவர்கள் அதிகம் பாதிக்கப்பட்ட குழுக்கள் என்று ஆணையம் தெரிவித்துள்ளது. அனைத்து சுற்றுலாப் பயணிகளும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டு பாதுகாப்பாக உறுதிப்படுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.

பார்வையாளர்களின் பாதுகாப்பிற்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை  சுற்றுலாத் தலங்கள் திறந்தே உள்ளன.

சேவைகள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன, சர்வதேச வருகைகள் தொடர்கின்றன. இது இந்தத் துறையின் நிலையான மீட்சி மற்றும் வளர்ச்சியைக் குறிக்கிறது என கூறியுள்ளது.

அத்துடன், சுற்றுலாத் தலங்கள் திறக்கப்பட்டு, சேவைகள் மீட்டெடுக்கப்பட்டு, சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் வருகை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் இலங்கை மீண்டெழுந்து வளர்ச்சியை நோக்கிய தனது பயணத்தைத் ஆரம்பிக்கத் தயாராக உள்ளது எனவும் குறிப்பிட்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X