2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

டிசெம்பரில் இரண்டு பரீட்சைக்குத் திட்டம்

Editorial   / 2018 செப்டெம்பர் 22 , பி.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் உயர்தரம் ஆகிய பரீட்சைகளை, டிசெம்பர் மாதத்தில் நடத்துவதற்கு, கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. 

இதனால், மாணவர்கள் கால தாமதம் இன்றி உயர் தரக் கல்விக் கல்வியை தொடர முடியும் என்று, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பின்னர் உயர்க்கல்வியைத் தொடர்வதற்காக, நீண்டகாலம் காத்திருக்க வேண்டியுள்ளது என்றும் உயர் தரப் பரீட்சையின் பின்னர், பல்கலைக்கழத்தில் அனுமதிப் பெறுவதற்கு, அதிக காலம் காத்திருக்க வேண்டியுள்ளது என்றும் இதனால், மாணவர்களின் முக்கியமான காலம் வீண் விரயமாவதாக, அமைச்சில் நேற்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளுக்காக மூடப்படும் பாடசாலைகளின் எண்ணிக்கையை, இயலுமான வரை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதன்போது அவர் தெரிவித்தார்.

மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு எதுவிதத் தடைகளும் ஏற்படாத வகையில், விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்கான அறிவுரைகளை, அமைச்சர் உரிய அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சையில் சித்தியெய்திய பின்னர், பல்கலைக்கழக பிரவேசத்துக்காகக் காத்திருக்கும் மாணவர்களுக்கு இடைப்பட்ட காலத்தை, பயனுள்ளதாக கழிப்பதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்றும் அறிமுகப்படுத்தப்படும் என்றும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X