2025 மே 01, வியாழக்கிழமை

’டொக்டர் ஜெயருவன் கூறியது பொய்’

Freelancer   / 2021 ஓகஸ்ட் 31 , பி.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் தயாரிக்கப்பட்ட தைரொக்ஸின் மருந்தின் தரத்தை சவால் செய்து டொக்டர் ஜெயருவன் பண்டார வெளியிட்ட அறிக்கை முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்று இராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமன தெரிவித்துள்ளார்.

“தைரொக்ஸின் இரத்மலானையில் உள்ள ஒரு தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டாலும், நாங்கள் அதை இன்னும் சந்தைக்கு வெளியிடவில்லை.

செப்டம்பரில் சந்தைக்கு வெளியிட திட்டமிட்டிருந்தோம். ஆனால் இந்த அறிக்கையை வெளியிட்ட நபர் என்ன சொன்னார்? 

இந்த தைராக்ஸின் மருந்தை குடித்த நோயாளிகள், அது எந்த விளைவையும் ஏற்படுத்தாது என்று கூறியதாகக் கூறுகிறார். அது அப்பட்டமான பொய்" என்று இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .