2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

டுபாயில் கொள்ளை: இலங்கையர் ஐவர் கைது

Kanagaraj   / 2016 ஜனவரி 12 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனித்துள்ள கிராமப்புற  பங்களாக்களில் பல மில்லியன் ரூபாய் பெறுமதியான பொருட்களை களவெடுத்ததாகக் கூறப்பட்ட 5 பேர் கொண்ட இலங்கை கோஷ்டியை டுபாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நாட்டை விட்டு வெளியேற முன்னரே, அக்குழுவினர் தங்களுடைய கைவரிசையை டுபாய், அல் பாஷா பகுதியில் உள்ள பங்களாக்களில் காண்பித்துள்ளனர்.

தனது வேலையை முடித்துவிட்டு வீட்டு உரிமையாளர் இரவு வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டுக்கதவு உடைக்கப்படு 25,000 திர்ஹாம் பெறுமதியான  கைக்கடிகாரங்களும் 100,000திர்ஹாம் பணமும் காணாமல் போயிருந்தது.

இவை தொடர்பில் வீட்டு உரிமையாளர் டுபாய் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார். விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், சந்தேக நபர்களில் 4 பேரை  டுபாய் விமான நிலையத்திலும் 5ஆவது நபரை வேறு இடத்திலும் கைது செய்துள்ளர்.

ஆட்கள் இல்லாத பங்களாக்களில் தாம் திருடி வருவதாக இவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

5ஆவது சந்தேக நபர் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் குடிவரவு விதியை மீறியிருப்பதாகவும் இந்தப் பகுதியில் இதுபோன்று எட்டு வீடுகளில் கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் டுபாய் அரசாங்க வழக்கு தொடருநரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X