2025 மே 19, திங்கட்கிழமை

டியூவின் மனுவுக்கு இன்று முடிவு

Thipaan   / 2015 ஒக்டோபர் 08 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த பொதுத்தேர்தலில் தோல்வியடைந்த 11 பேரை, தேசியப் பட்டியலின் ஊடாக நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்தமையை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி, ஸ்ரீ லங்கா கொம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டியூ குணசேகர தாக்கல் செய்துள்ள மனுவை, பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் தலைமையிலான நீதியரசர்கள் குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுப்பதற்கு உயர்நீதிமன்றம், நேற்று புதன்கிழமை தீர்மானித்தது.

எனினும், இந்த மனுவை ஐந்து நீதியரசர்கள் குழு முன்னிலையிலா அல்லது முழுமையான நீதியரசர்கள் குழு முன்னிலையிலா பரிசீலனைக்கு உட்படுத்துவது என்பது தொடர்பில் தீர்மானத்தை எடுப்பதற்கு அம்மனுவை, பிரதம நீதியரசருக்கு, இன்று 8ஆம் திகதி அனுப்புவதற்கு நேற்று 7ஆம் திகதி தீர்மானிக்கப்பட்டது.

இந்த மனு, நீதியரசர்களான புவனகே அலுவிஹார, உபாலி அபேரத்ன மற்றும் அனில் குணரத்ன ஆகியோர் கொண்ட நீதியரசர்கள் குழு முன்னிலையில் எடுக்கப்பட்டது.

தேசியப் பட்டியல் எம்.பி.யாக தன்னை நியமிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளருக்கு கட்டளையிடுமாறு மனுதாரரான டியூ குணசேகர, தனது மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளார்.

மனுவில் சட்டமா அதிபர் உள்ளிட்ட 15 பேர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கதாகும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X