2025 நவம்பர் 25, செவ்வாய்க்கிழமை

தங்கம் விலை கிடுகிடுவென எகிறியது

Editorial   / 2025 நவம்பர் 25 , பி.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது, ஒப்பிடுகையில், இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் கணிசமாக அதிகரித்துள்ளது.

இன்றைய (25) ஆம் திகதிய நிலவரப்படி, உலக தங்கத்தின் விலை  4,150 டொலராக அதிகரித்துள்ளது.

இலங்கையில் தங்கத்தின் விலை திங்கட்கிழமை (24)  விலையுடன் ஒப்பிடும்போது செவ்வாய்க்கிழமை(25) நிலவரப்படி ரூ.6,000 அதிகரித்துள்ளது என்று சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.

அதன்படி, கொழும்பு செட்டியார்தெரு தங்க சந்தையில் ஒரு பவுண் "22 கரட்" தங்கத்தின் விலை ரூ.309,200 ஆக இருந்தது.

​திங்கட்கிழமை (24) அன்று ரூ.303,600 என குறிப்பிடப்பட்டிருந்தது. 

இதற்கிடையில், திங்கட்கிழமை (24) அன்று ரூ.330,000 ஆக இருந்த "24 கரட்" தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை(25)  ரூ.336,000 ஆக அதிகரித்துள்ளது  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X