S.Renuka / 2026 மார்ச் 24 , பி.ப. 05:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகப் பொருளாதாரம் ஒரு பக்கம் தள்ளாட்டத்தில் இருக்க, மறுபக்கம் உலக நாடுகளின் மத்திய வங்கிகள் ஒரு விடயத்தில் மட்டும் தெளிவாக இருக்கின்றன. அது-தங்கம் வாங்குவதே!
சர்வதேச அளவில் நிலவும் அரசியல் பதற்றங்கள் மற்றும் 'டொலர்' ஆதிக்கத்தைக் குறைக்க நாடுகள் எடுக்கும் முயற்சிகளால், வரும் காலங்களில் தங்கத்திற்கான விலை எகிறப்போவதாக உலக தங்க கவுன்சில் (WGC) தெரிவித்துள்ளது.
திடீர் 'என்ட்ரி' கொடுக்கும் புதிய நாடுகள்
இதுவரை அமைதியாக இருந்த பல நாடுகள் இப்போது திடீரென தங்கத்தை நோக்கி ஓடத் தொடங்கியுள்ளன. இது குறித்து உலக தங்க கவுன்சிலின் அதிகாரி ஷாகாய் ஃபான் கூறுகையில், "கடந்த சில மாதங்களாக ஒரு சுவாரஸ்யமான மாற்றம் நடக்கிறது. நீண்ட காலமாக தங்கம் வாங்காமல் இருந்த அல்லது இதுவரை தங்கச் சந்தைக்கே வராத மத்திய வங்கிகள் கூட இப்போது போட்டிப் போட்டுக் கொண்டு முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளன," என தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, குவாத்தமாலா, இந்தோனேசியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளின் மத்திய வங்கிகள், நீண்ட இடைவேளைக்குப் பிறகு சமீபத்தில் பெரிய அளவில் தங்கத்தை வாங்கியுள்ளன.
ஏன் இந்த ஆர்வம்?
டொலர் மீதான பயம்: அமெரிக்க டாலரின் பிடியிலிருந்து தற்காத்துக்கொள்ள (De-dollarization), பல நாடுகள் தங்களது கையிருப்பில் தங்கத்தின் அளவை உயர்த்தி வருகின்றன.
பதற்றமான சூழல்: உலகப் போர் அச்சம், பிராந்திய மோதல்கள் போன்ற இக்கட்டான காலங்களில் கை கொடுக்கும் ஒரே 'சேஃப் ஹேவன்' (Safe Haven) தங்கம்தான் என்பது உலக நாடுகளின் அசைக்க முடியாத நம்பிக்கை.
பொருளாதாரப் பாதுகாப்பு: மற்ற கரன்சிகளின் மதிப்பு சரிந்தாலும், தங்கத்தின் மதிப்பு எப்போதும் கைகொடுக்கும் என்பதால், மத்திய வங்கிகள் இந்த ரூட்டை கையில் எடுத்துள்ளன.
அமெரிக்கா: 8,133.5 தொன்கள் - உலகின் மிகப்பெரிய தங்கம் இருப்பைக் கொண்டுள்ள நாடு.
* ஜேர்மனி: 3,350.3 தொன்கள் - ஐரோப்பாவின் முதன்மையான தங்கம் சேமிப்பாளராகத் திகழ்கிறது.
* இத்தாலி: 2,451.8 தொன்கள் - பல தசாப்தங்களாகத் தனது தங்கம் இருப்பை நிலையாகத் தக்கவைத்துள்ளது.
* பிரான்ஸ்: 2,437.0 தொன்கள் - பொருளாதாரப் பாதுகாப்பிற்காகப் பெரும் பகுதியைத் தங்கமாக வைத்துள்ளது.
* ரஷ்யா: 2,327.0 தொன்கள் - சமீபத்திய ஆண்டுகளில் டாலர் பயன்பாட்டைக் குறைக்கத் தங்கத்தை அதிகமாகக் குவித்து வருகிறது.
* சீனா: 2,306.0 தொன்கள் - சர்வதேசச் சந்தையில் தங்கத்தை வாங்குவதில் முன்னணியில் உள்ளது.
* சுவிட்சர்லாந்து: 1,040.0 தொன்கள் - தனது நாட்டின் பொருளாதார நிலையை உறுதிப்படுத்தத் தங்கம் வைத்துள்ள முக்கிய நாடு.
* இந்தியா: 880.0 தொன்கள் - இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கடந்த சில மாதங்களாகத் தங்கம் வாங்குவதைத் தீவிரப்படுத்தியுள்ளது.
* ஜப்பான்: 846.0 தொன்கள் - தனது அன்னியச் செலாவணி இருப்பில் ஒரு முக்கியப் பங்காகத் தங்கத்தை வைத்துள்ளது.
* துருக்கி / நெதர்லாந்து: 614.0 தொன்கள் - சமீபத்திய நிலைவரப்படி துருக்கி 10ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. (இருப்பினும் துருக்கி மற்றும் நெதர்லாந்து இடையே கடும் போட்டி நிலவுகிறது).
கடந்த காலங்களில் பெரிய நாடுகள் மட்டுமே தங்கத்தை ஒரு முக்கிய முதலீடாகக் கருதின.
ஆனால், 2026இன் தற்போதைய சூழலில் சிறிய நாடுகளும் தங்களது பொருளாதாரப் பாதுகாப்புக்காக தங்கத்தை நோக்கித் திரும்புவது, உலக வர்த்தகத்தில் ஒரு முக்கியத் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago