2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

தடுப்பு காவலில் இருந்த சந்தேக நபர் மரணம்

Freelancer   / 2025 ஒக்டோபர் 04 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் பேசாலை பொலிஸ்  பிரிவில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பேசாலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த  34 வயதுடைய  நபர் ஒருவர் நேற்று (3) பொலிஸ் நிலைய தடுப்பு காவலில் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் வவுனியா கூமாங்குளத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் கபிலன் (வயது 34) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பேசாலை பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட கட்டாஸ்பத்திரி  பகுதியில் நேற்று முன்தினம் (2) மாலை  போதை பொருள் தொடர்பாக சந்தேகத்தின் பெயரில் குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.  
 
குறித்த நபரை  பேசாலை பொலிஸார்  துரத்தி பிடித்ததோடு, இவருடன் இருந்த மற்றொரு நபர் தப்பி ஓடியதாக  தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட குறித்த நபரை பொலிஸார்   பேசாலை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று பொலிஸ்  நிலைய தடுப்பு காவலில் வைத்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

பின்னர் குறித்த நபர் பொலிஸ் நிலைய கூண்டில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில், நேற்று (3) காலை குறித்த சந்தேக நபர் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X