2021 மே 17, திங்கட்கிழமை

தடுப்பூசி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்

S. Shivany   / 2021 மார்ச் 08 , பி.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

மார்ச் மாதம் நடுப்பகுதி மற்றும் ஏப்ரல் மாதமளவில் இந்தியாவில் இருந்து கிடைக்கவிருந்த மற்றுமொரு தொகுதி கொரோனா தடுப்பூசிகள் உரிய நேரத்துக்கு நாட்டுக்கு  கிடைக்காதென தகவல் வெளியாகியுள்ளது.

தமது நிறுவனத்துக்கு கிடைத்துள்ள புதிய கேள்விகள் மற்றும் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, இலங்கைக்கு தடுப்பூசிகளை வழங்குவதில் தாமதம் ஏற்படும் என, இந்திய மருந்து உற்பத்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

15 இலட்சம் தடுப்பூசிகளை வழங்குவதாக இணக்கம் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், 5 இலட்சம் தடுப்பூசிகள் மாத்திரமே நாட்டுக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .