Freelancer / 2022 மார்ச் 06 , பி.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்..செல்வராஜ்
பிரஜா உரிமையையும், வாக்குரிமையையும் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு எனது தகப்பன் பெற்றுக்கொடுத்ததைப் போன்று, அவரது மகனான நான், எனது
ஆட்சியில் அத்தொழிலாளர்களுக்கு வீட்டு உரிமையையும், காணி உரிமையையும் பெற்றுக் கொடுப்பேன் என்று, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ உறுதியளித்தார்.
இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் 26வது மாநாடும் மகளிர் தின நிகழ்வுமாக இருபெரும் விழாக்கள் பதுளை மாநகரில், சனிக்கிழமை (05) நடைபெற்றது. அதில் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“தொழிலாளர்கள் வாழ்ந்துவரும் நீண்ட லயன் குடியிருப்பு முறைமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். தமக்கான தனிவீடுகள்
அவர்கள் அனைவருக்கும் இருக்க வேண்டியது அவசியமாகும்“ எனத் தெரிவித்த அவர், “அவ்வீடுகளுக்கான பூரண உரிமை தொழிலாளர்களுக்கு இருக்கவும் வேண்டும். எமது ஆட்சியிலேயே அவற்றை செய்வோம்“ என்றார்.
9 minute ago
15 minute ago
21 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
15 minute ago
21 minute ago
34 minute ago