Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 மே 29 , மு.ப. 10:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.ரி.சகாதேவராஜா
மட்டக்களப்பு மாவட்டத்தில் தனித் தமிழ் மக்கள் முழுமையாக வாழ்கின்ற கல்லாற்றில் புத்தர் சிலை தொடர்ந்து நிலை கொண்டிருப்பது முறையாகுமா? தேவையா? அது இன சௌஜன்யத்தை, நல்லிணக்கத்தை பாதிக்கும். எனவே அச்சிலை அகற்றப்பட வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் மா.நடராஜா தெரிவித்தார்.
கல்லாற்றில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை விவகாரம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்...
பெரிய கல்லாறு பாலத்தின் அருகே பிரதான வீதியில் இராணுவ சூழல் இருந்த காலகட்டத்தில் இந்த புத்தர் சிலை ஒரு தனியார் காணியில் வைக்கப்பட்டிருக்கின்றது .
சின்னவத்தை பிரதேச பிக்கு ஒருவரினால் இந்த சிலை அடாத்தாக அந்த காணியிலேயே வைக்கப்பட்டதாக அறிகிறேன்.
அந்த காலகட்டத்திலே இராணுவம், பொலிஸார் ஆட்சி நிலவிய காலம் என்ற காரணத்தினால் பொது மக்களாலோ ஏனைய அரசியல் வாதிகளாலோ எதுவும் செய்ய முடியாத ஜனநாயக மற்ற ஒருசூழ்நிலை இருந்தது .
ஆனால், இன்று சகல இன மக்களையும் அனுசரித்து சாதி, இன,மத பேதம் இல்லாமல் ஊழல் ஒழிப்போம் என்று வந்த அரசாங்கம் ஆட்சியில் உள்ளது.
எனவே, முழு தமிழ் மக்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள் வாழ்கின்ற இந்த கல்லாற்றில் அதுவும் கிறிஸ்தவ தேவாலயத்திற்கு முன்பாக தனியார் காணியில் அடாத்தாக வைக்கப்பட்டது. இன்று அங்கு எந்த பௌத்தர்களும் இல்லை. வணங்குவதற்கு கூட யாருமில்லை.
இன்று அது அங்கு அவசியமா? என்ற கேள்வி எழுகின்றது. இது தொடர்பாக இந்த மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் யாரும் வாய்திறப்பதாகவும் இல்லை . எதற்கெல்லாமோ குரல் எழுப்புகிறார்கள். ஆனால், எமது உரிமையோடு இருப்போடு மண்ணோடு கூடிய இந்த விஷயத்தை கண்டும் காணாமல் இருக்கிறார்கள். இதேபோல் உகந்தமலையிலும் புத்தர் சிலை முளைத்துள்ளது.
இந்துவாகப் பிறந்த புத்த பகவான் எந்த இடத்திலும் தன்னை கொண்டு இப்படி ஏனைய இன வேறிடத்தில் நிறுத்தி இன உறவை சீரழிக்குமாறு கூறவில்லை .உகந்த மலையில் அதே செயல்பாடு தான் தொடர்ந்திருக்கிறது.
எனவே, நல்லிணக்க அரசாங்கம் இதை கவனத்தில் கொண்டு இவ்வாறு தனித் தமிழர்கள் வாழ்கின்ற இடங்களில் இருக்கின்ற இந்த புத்தர் சிலைகளை அகற்ற வேண்டும் என்று அன்பாக வேண்டிக் கொள்கிறேன் என்றார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago