2025 ஜூன் 11, புதன்கிழமை

தனிமையில் வசித்த வயோதிபர் சடலமாக மீட்பு

Freelancer   / 2024 டிசெம்பர் 13 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். வடமராட்சி, அல்வாய் மேற்கு - ஆண்டாள் தோட்டம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தனிமையில் வசித்து வந்த வயோதிபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அதே இடத்தைச் சேர்ந்த கந்தையா கணபதிப்பிள்ளை (வயது 86) என்ற வயோதிபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவர் வீட்டில் தனிமையில் வசித்து வந்த நிலையில் நேற்றுக் காலையில் இருந்து கூக்குரல் இட்டவாறு இருந்துள்ளார்.

பின்னர் சத்தம் கேட்காது இருந்த நிலையில் அயலவர்களால் கிராம அலுவலர் மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகருக்குத் தெரியப்படுத்தப்பட்டது.

அவர்கள் அங்கு சென்று பார்த்தபோது குறித்த வயோதிபர் சடலமாகக் காணப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்துக்கு நேற்று இரவு சென்ற பருத்தித்துறை பதில் மரண விசாரணை அதிகாரி திருமதி அன்ரலா வின்சன்தயான் விசாரணை செய்து உடற்கூற்றுப் பரிசோதனை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பருத்தித்துறைப் பொலிஸாருக்கு உத்தரவிட்டார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 13

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 13

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 11

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 10