Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 13 , மு.ப. 08:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனியார் பாடசாலைகளின் விரிவாக்கம் தொடர்பிலான அமைச்சரவைப் பத்திரத்தை இடைநிறு த்துவதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று, நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன வலியுறுத்தியுள்ளார்.
தனியார் பாடசாலைகளின் விரிவாக்கம் தொடர்பிலான அமைச்சரவைப் பத்திரத்தை, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் சமர்ப்பித்துள்ளாரென்றும் இது, இலவசக் கல்வியைத் தனியார் மயப்படுத்துவதற்கான முயற்சியென்றும் அவர் சாடியுள்ளார்.
கொழும்பில் நேற்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறியுள்ள அவர், அரசாங்கத்தால் அங்கிகரிக்கப்பட்ட 80 தனியார் பாடசாலைகள் உள்ளன என்றும் அந்தப் பாடசாலைகள் ஒவ்வொன்றும், ஆகக் குறைந்தது ஐந்து கிளைகளை விஸ்தரிப்பதற்கான அனுமதியை, அரசாங்கத்திடம் கோரியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
ஒரு கல்லூரி, ஐந்து கிளைகளை விஸ்தரிக்குமாயின் நாடளாவிய ரீதியில், 400 கல்லூரிகள் உருவாகுமென்றும் இதனால், அரசாங்கப் பாடசாலைகளுக்கான கேள்விகள் குறைவடையுமென்றும் தெரிவித்த அவர், மேலும் அரசாங்கப் பாடசாலைகளில் தற்போதுள்ள இடநெருக்கடிகளைக் குறைப்பதற்கும் இது காரணமாக அமையுமென்றும் தெரிவித்தார்.
மேலும் இந்த நடைமுறையானது, தனியார் பாடசாலைகளுக்கு, தமது பிள்ளைகளை அனுப்ப விரும்பாத பெற்றோர்களைக் காட்டிக்கொடுக்கும் செயலென்றும் விமர்சித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
2 hours ago