2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

தன்சல் தொடர்பில் விசேட அறிவுறுத்தல்

J.A. George   / 2025 ஏப்ரல் 28 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் வெசாக் காலத்தில் தன்சல் வழங்குவோர், அதனை  மே மாதம் 9 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்ய வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அருகில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் தன்சல்களை பதிவு செய்ய  நடவடிக்கை எடுக்குமாறு அந்த சங்கம் அறிவுறுத்தி உள்ளது.

இதேவேளை, தன்சல் காலப்பகுதியில் தன்சல், உணவு விற்பனை நிலையங்கள், ஹோட்டல்கள் மற்றும் நடமாடும் உணவு விற்பனை நிலையங்கள் விசேட சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளன.

இந்த நடவடிக்கையில், சுமார் 3ஆயிரம் பொது சுகாதார பரிசோதகர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X