2026 ஜனவரி 02, வெள்ளிக்கிழமை

தன்னியக்க வெள்ள வீதித்தடை உபகரணத்தை கண்டுபிடித்த மாணவனுக்கு பரிசு

Editorial   / 2025 டிசெம்பர் 30 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.ரி.சகாதேவராஜா

 சமகாலத்திற்கு பொருத்தமான தன்னியக்க வெள்ள வீதித்தடை உபகரணத்தை கண்டுபிடித்த சம்மாந்துறை மாணவனுக்கு ஊக்குவிப்பாக 50 ஆயிரம் ரூபாய் பரிசை சம்மாந்துறை பிரதேச சபை வழங்கி கௌரவித்தது.

 

சம்மாந்துறை அல் - அமீர் வித்தியாலத்தின் தரம் 09 கல்வி பயிலும் மாணவன் ஏ.எம்.எம்.அப்ஹாம் தன்னியக்க வெள்ள வீதித் தடை உபகரணத்தை கண்டுபிடித்து மாகாண மட்டத்தில் முதலிடம் பெற்றிருந்தார் .

அவரின் கண்டுபிடிப்பை ஊக்குவிக்கும் நோக்கில் (50,000/=) ஐம்பது ஆயிரம் ரூபாய்  வழங்குவதற்கு சம்மாந்துறை பிரதேச சபையின் அனைத்து  உறுப்பினர்களின் ஏகமனதாக ஆதரவளித்தனர்.

 சம்மாந்துறை பிரதேச சபையின் விசேட  அமர்வு  தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் தலைமையில் சபா மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (26) இடம்பெற்ற பின்னர் சாதனை மாணவனை சபைக்கு அழைத்து அங்கு தவிசாளர் மாஹிர், காசோலையை வழங்கி கௌரவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X