2025 டிசெம்பர் 10, புதன்கிழமை

தென் கொரியாவிலுள்ள இலங்கையர்கள் வழங்கிய நன்கொடை

Freelancer   / 2025 டிசெம்பர் 10 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் கொரியாவில் தொழில்புரியும் இலங்கையர்களால் திரட்டப்பட்ட 38.43 மில்லியன் ரூபா பெறுமதியான நிதி, இலங்கையில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு ஆதரவளிப்பதற்காக நேற்று (09) பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் கையளிக்கப்பட்டது.
 
இந்த நிதித் திரட்டல் முயற்சியைத் தென் கொரியாவின் ஜியோன்ஜு நகரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் மேற்பார்வையாளராகப் பணியாற்றும் இலங்கையர் ஒருவரே வழிநடத்தியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. 

இந்தநிலையில் தென் கொரியாவில் உள்ள இலங்கை வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் வர்த்தக உரிமையாளர்கள், தான் தனிப்பட்ட முறையில் விடுத்த உதவிக்கான கோரிக்கையை நம்பி அளித்த நன்கொடைகள் மூலம் வெறும் 48 மணி நேரத்தில் இந்த நிதி திரட்டப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X