2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

தனுனவின் கடவுச்சீட்டு விடுவிப்பு

Kanagaraj   / 2015 நவம்பர் 24 , மு.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹைகோப் வழக்கிலிருந்து கடந்த ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி விடுதலை செய்யப்பட்ட பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் மருமகனான தனுன திலகரத்னவின் கடவுச்சீட்டை, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தேவிகா டி லிவேரா தென்னகோன், நேற்று(23) விடுவித்தார்.

சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாக 2007- 2008ஆம் ஆண்டு காலப்பகுதியில், பாதுகாப்பு அமைச்சின் பெயரில் போலி ஆவணங்களை தயாரித்து அந்த அமைச்சுக்கு பொருட்களை விநியோகிக்கும் அவுஸ்திரேலியாவின் ப்ரிட்ஸ் போர்னியோ நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதியாக தம்மை அடையாளப்படுத்தி, இராணுவ விலைமனுவொன்றை பெற்றுக்கொண்டதாக சரத் பொன்சேகா, தனுன திலகரட்ன மற்றும் ஹைக்கோப் நிறுவனத்தின் பணிப்பாளரான வெலிங்டன் டி ஹோட் ஆகிய மூவருக்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

80 மின்பிறப்பாக்கிகள், 50 மின்கலங்கள், 5 திசைகாட்டிகள் மற்றும் இரவில் பார்க்க உதவும் 484 கமெராக்கள் போன்றவை தொடர்பான விலைமனுக்கோரரில் தயாரித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

இந்த குற்றச்சாட்டு தொடர்பிலான வழக்கு விசாரணை ஆரம்பமான சந்தர்ப்பத்தில் சுமார் ஐந்து வருடங்கள் தலைமறைவாகியிருந்த தனுன திலகரத்ன, ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து தனுன திலகட்ன சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றத்தில் சரணடைந்திருந்தார்.

பின்னர் அவர், நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .