2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

துப்பாக்கிச்சூட்டில் முன்னாள் உறுப்பினர் பலி: துப்பாக்கிதாரி கைது

Editorial   / 2025 ஓகஸ்ட் 12 , பி.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

மீகொட பகுதியில் செவ்வாய்க்கிழமை (12) மதியம்  நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் 47 வயதான சாந்த முதுங்கொடுவ மரணமடைந்தார்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் போது உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொதுஜன ஐக்கிய பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்பினரான இவர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து ஹோமாகம பிரதேச சபை உறுப்பினராக இருந்தார், கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் சர்வஜன பலய கட்சியில் போட்டியிட்டார், ஆனால் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

முன்னாள் உறுப்பினர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, வெள்ளை நிற காரில் வந்த ஒரு குழு துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச் சென்றது.

மீகொட பகுதியில் ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரை சுட்டுக் கொன்ற துப்பாக்கிச் சூடு நடத்தியவர் தலவத்துகொட பகுதியில் தலங்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .