2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

தமிழக மீனவர்கள் மயிலிட்டிக்கு குழு விஜயம்

Editorial   / 2025 ஓகஸ்ட் 26 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதர்ஷன் வினோத்

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்டு இலங்கை  நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட ஏழு மீன்பிடி படகுகளை பார்வையிட  தமிழக மீனவர்கள் குழுவினர் மயிலிட்டி துறைமுகத்திற்கு வருகை தந்தனர்.

யாழ்ப்பாணம் வருகை தந்த தமிழக மீனவர்கள் குழு மயிலிட்டியில் தரித்து நின்ற படகுகளை பார்வையிட்டனர்.

ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று 2022-23 ஆண்டுகளில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்ற ஏழு படகுகளை கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நீதிமன்றம் விடுதலை செய்தது.

விடுதலை செய்யப்பட்ட ஏழு மீன்பிடி விசைப் படகுகளை மீட்டு தமிழகத்திற்கு எடுத்து வர இரண்டு வருடங்களுக்கு பின்னர் இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியது.

இதையடுத்து விடுதலை செய்யப்பட்ட  ஏழு படகுகளின் நிலைமையை ஆய்வு செய்து மீட்டு தமிழகம் கொண்டு வருவதற்காக 14 பேர் கொண்ட குழு இன்று காலை ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து யாழ்ப்பாணம் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு வருகை தந்தனர்.

 யாழ்ப்பாணம் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு வருகை தந்த மீனவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள 124 தமிழக மீன்பிடி படகுகளுக்கு மத்தியில் விடுதலை செய்யப்பட்ட ஏழு படகுகளையும் பார்வையிட்டனர்.

 முதற்கட்ட ஆய்வின்போது படகுகளின் நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டு தமிழகம் எடுத்து வர தகுதியுடைய படகுகளை எடுத்து வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாக இலங்கை சென்றுள்ள தமிழக மீனவர்கள் குழு தெரிவித்துள்ளனர்.

இன்றைய தினம் பார்வையிட்ட ஏழு படகுகளும் எடுத்துச் செல்லும் நிலையில் உள்ளதால் அதை தமிழகத்திற்கு எடுத்துச் சென்று பழுது பார்த்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு உத்தேசித்துள்ளதாக மயிலிட்டிக்கு வருகை தந்த இந்திய மீனவர்கள் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X