Nirosh / 2021 ஜனவரி 09 , பி.ப. 12:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்டமைக்கு முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய இலங்கை அரசாங்கம் உயிர் வாழும் தமிழரை மட்டுமல்ல, உயிரிழந்த தமிழரையும் இலங்கையராக கருத மறுப்பதாகவும் அவர் குற்றஞ்சுமத்தியுள்ளார்.
இதுத் தொடர்பில் டுவிட் செய்துள்ள மனோ, ''யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் பணியாற்றி போரினால் மரணித்த மாணவர், ஊழியர், உறவுகளை நினைவுக்கூர்ந்து நிறுவப்பட்ட "முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை" இடித்து தள்ளி, இன்றைய இலங்கை அரசு, உயிர் வாழும் தமிழரை மட்டுமல்ல, உயிரிழந்த தமிழரையும் இலங்கையராக கருத மறுத்து நிற்கிறது. '' எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
25 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
49 minute ago