2024 மே 21, செவ்வாய்க்கிழமை

திருடிக்கொண்டு ஓடும்போது கிணற்றில் வீழ்ந்த திருடன்

Freelancer   / 2023 மே 25 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீட்டுக்குள் நள்ளிரவில் புகுந்த திருடன் அங்கிருந்த பணம் மற்றும் கைத்தொலைபேசியை திருடிவிட்டு தப்பிச் செல்லும் சந்தர்ப்பத்தில் கிணற்றில் வீழ்ந்த சம்பவம் இன்று(25) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

 திருடன் பணத்தையும் பொருட்களையும் திருடும் சந்தர்ப்பத்தில் வீட்டு உரிமையாளர் விழித்துக்கொண்டதாகவும் அதனையடுத்து திருடன் தப்பிச்சென்ற போது வீட்டின் பின்புறம் வலையால் மூடப்பட்டிருந்த கிணற்றில் தவறி வீழ்ந்ததாகவும் செய்தியாளர் குறிப்பிட்டார்.

இதனையடுத்து அலவ்வ பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளதுடன் அங்கு வந்த பொலிஸார் ஏணியை வைத்து திருடனை மீட்டெடுத்து கைது செய்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .