R.Tharaniya / 2025 நவம்பர் 26 , பி.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
சினிமாவின் முன்னேற்றம் நாட்டு மக்களின் ஆன்மீக வளர்ச்சியில் தாக்கம் செலுத்துகிறது என்றும், எனவே, உள்நாட்டு திரைப்படத் துறையைப் பாதுகாக்கும் அதே வேளையில், வெளிநாட்டு திரைப்படங்களைப் பார்க்கும் வாய்ப்பு இலங்கை ரசிகர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இன்று (26) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் திரைப்பட விநியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுடனான கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.
தொழில்துறையாக அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், அந்த அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஜனாதிபதி சாதகமான பதில்களை வழங்கினார்.
குறிப்பாக பெறுமதி சேர் வரி (VAT) செலுத்துவதில் ஏற்பட்டுள்ள முறைகேடுகள் மற்றும் தொழில்துறையை விரிவுபடுத்துவதில் உள்ள கட்டுப்பாடுகள் குறித்து திரைப்பட விநியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் ஜனாதிபதியிடம் விளக்கினர்.
2025 ஆம் ஆண்டில் சினிமா ஒரு துறையாக வரலாற்றில் அதிக வருமானத்தை ஈட்டியுள்ளதாகவும், அதனைத் தொடர அரசாங்க ஆதரவை வழங்குமாறும் அவர்கள் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டனர்.
அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி, தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுதத் மஹதிவுல்வெவ மற்றும் பொது முகாமையாளர் ருவன் பிரேமவீர ஆகியோர் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.
திரைப்பட விநியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தி நடிகர் சனத் குணதிலக்க, ஜானகீ விஜேரத்ன (Lyca Productions), ஜனித் பிரசன்ன விதானகே (JP Ceneplex-Kandy), துஷான் ரணகன மீமனகே (LFD), ருவிந்து குணரத்ன (EAP), அநுர ஜசெந்துலியன (Lite Cinema), இம்தியாஸ் காதர் (CEL), கங்கா ரத்துவிதான (Ceylon Theaters) மற்றும் அனுஷ்க எகொடவத்த (PVR) ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.





19 minute ago
33 minute ago
50 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
33 minute ago
50 minute ago
56 minute ago