Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஒக்டோபர் 19 , பி.ப. 01:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருமண வைபவத்துக்கு உறவினர்களை ஏற்றிக்கொண்டு சென்ற கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆசாத்நகர் பகுதியில் விபத்துக்குள்ளானதில் காரில் பயணித்த தம்பதியினர் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.
திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியின் ஆசாத் நகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (19) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக அக்கரைப்பற்றில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த காரானது வேகக் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது காரில் இருந்த எயார்பேக் வெளிவந்ததினால் காரில் பயணித்த தம்பதியினர் இருவரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.
சாரதியின் நித்திரை கலக்கமே விபத்துக்கான காரணமென தெரியவருகிறது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
2 hours ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago