2021 ஜூன் 21, திங்கட்கிழமை

தூர இடங்களுக்கான பஸ் சேவை தொடர்ந்தும் மட்டுப்பாட்டில்

R.Maheshwary   / 2021 மே 16 , பி.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாகாணங்களுக்கிடையில் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தூர இடங்களுக்கான பஸ் சேவைகளை மேலும் மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

தேவைக்கேற்ப அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் பஸ்களை சேவையில் ஈடுபடுத்துமாறு, இலங்கை போக்குவரத்து சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேப்போல் அத்தியாவசிய கடமைகளுக்காக அழைக்கப்பட்டவர்கள் மாத்திரம், குறித்த பஸ் சேவைகளைப் பயன்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .