2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

தலையில் ஏற்பட்ட காயமே நடிகை கவீஷாவின் மரணத்துக்கு காரணம்

George   / 2016 ஒக்டோபர் 16 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகை கவீஷா ஆயெஷானி (25 வயது)  தலையில் ஏற்பட்ட படுகாயம் காரணமாகவே உயிரிழந்துள்ளதாக மரண விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனை தென் கொழும்பு போதனா வைத்தியாசலையின் வைத்தியர், தி​டீர் மரண விசாரணை அதிகாரி வைத்தியர் என்.ஏ.சீ.நந்தசிறி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கவீஷா ஆயெஷானியின் உடற்பாகங்கள் அரச பகுப்பாய்வு திணைக்களத்துக்கு பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

நுகேகொடை, ஜுப்லி கம்பத்துக்கருகில், இன்று அதிகாலை இடம்பெற்ற கார் விபத்தில், நடிகை கவீஷா ஆயெஷானி (25 வயது) இன்று காலையில் உயிரிழந்தார்.

அவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில்  சந்தேகநபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பஸ் சாரதி என்று கூறப்படும் நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்

விபத்துக்கு உள்ளான பஸ் நடைமேடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும், எதிர்த் திசையில் வந்த நடிகையின் கார், குறித்த பஸ்ஸில் மோதி விபத்துக்குள்ளாகியதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் படுகாயமடைந்த நடிகை, களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .