Janu / 2023 டிசெம்பர் 17 , பி.ப. 04:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு - ஆறுமுகத்தான் குடியிருப்பில் இடம்பெற்ற வீதி விபத்தில் 16 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் சனிக்கிழமை (16) பதிவாகியுள்ளது.
ஏறாவூர் தாமரைக்கேணியை சேர்ந்த அமீர்தீன் யாசீர் அறபாத் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கல்முனைக்குச் சென்ற தாயின் வருகை எதிர்பார்த்து பஸ் தரிப்பிடத்தில் காத்திருந்த சிறுவன் தாயைக் கண்டதும் பிரதான வீதியை கடக்க முற்பட்டபோது தனியார் ஆடைத் தொழிற்சாலைக்கு சொந்தமான பஸ் ஒன்றின் மீது மோதி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்
குறித்த பஸ்ஸின் சாரதி ஏறாவூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் சிறுவனின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
பேரின்பராஜா சபேஷ்

12 minute ago
25 minute ago
33 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
25 minute ago
33 minute ago
34 minute ago