2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

தெஹிவளையில் 6 வாள்களுடன் இரு வர்த்தகர்கள் கைது

Editorial   / 2019 ஏப்ரல் 29 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெஹிவளை பிரதேசத்தின் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரும் மேலுமொரு வர்த்தகரும் 6 வாள்களுடன்  இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தெஹிவளை பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது, 5 மா​டிகளைக் கொண்ட கோடீஸ்வர வர்த்தகரின் வீட்டிலிருந்தும், மற்றொரு வர்த்தகரின் வீட்டிலிருந்தும் இந்த வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்ட வர்த்தகர்களுள் ஒருவர் வாகன விற்பனை நிலையத்தின் உரிமையாளர் என்றும் ஏனைய வர்த்தகர் மருந்துப் பொருட்கள் விற்பனை நிலையத்தின் உரிமையாளர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .