2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

தேசபந்துவை நீக்கும் தீர்மானம் ஜனாதிபதியிடம்

Freelancer   / 2025 ஓகஸ்ட் 06 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மாஅதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்காக பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்கும் தீர்மானம் மீது நேற்று (06) இடம்பெற்ற வாக்கெடுப்பில் அதற்கு ஆதரவாக 177 பேரும், எதிராக எவரும் வாக்களிக்கவில்லை. 

ஒரு பாராளுமன்ற உறுப்பினர் மாத்திரம் வாக்களிப்பிலிருந்து விலகியிருந்த நிலையில், குறித்த தீர்மானம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டிருந்ததது. 

இந்நிலையில் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட குறித்த தீர்மானம் தற்போது சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவினால் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

இதன் பின்னர் ஜனாதிபதி, அரசியலமைப்பு சபைக்கு பொலிஸ்மா அதிபர் பதவிக்கான புதியவரின் பெயரை பரிந்துரைப்பார். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X