2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

தேசிய அரசாங்கத்தில் இணைய மாட்டோம்

Nirosh   / 2022 மார்ச் 27 , பி.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

"தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையைப்  பயன்படுத்தி தேசிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கு அரசாங்கம்  முயற்சி எடுத்துவந்தாலும், அவ்வாறானதொரு தேசிய அரசாங்கத்துக்கு தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆதரவை வழங்காது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவர் வே. இராதாகிருஷ்ணன் எம்.பி தெரிவித்தார். 

தலவாக்கலையில் இன்று (27) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து  வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். 

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், "தேசிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளன. எமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அவ்வாறு  விடுக்கப்பட்டாலும் நாம் அதில் இணையமாட்டோம்.

தேசிய அரசாங்கத்தை அமைப்பதால் பாரிய மாற்றம்    ஏற்படப்போவதில்லை. இதே ஜனாதிபதிதான் ஜனாதிபதி பதவியில் தொடர்வார்.   பாராளுமன்றத்திலும் அவர்களின் அதிகாரமே காணப்படும். எனவே, ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் புதியதொரு ஆட்சியே எமது இலக்கு. அந்த இலக்கை அடையவே எமது எதிர்பார்ப்பாக உள்ளது.” எனவும் தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X