2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

தாஜுதீனின் மரணம்: 6 வங்கி; அறிக்கைகளை கையளிக்க உத்தரவு

Kanagaraj   / 2016 மே 24 , பி.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல றக்பி வீரர் வசீம் தாஜுதீனின் மரணம் தொடர்பில், அவருடைய நண்பர்கள் உள்ளிட்ட அறுவரின் வங்கிக் கணக்குகளை, குற்றப்புலனாய்வுப் பிரிவுக்குக் கையளிக்குமாறு, கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் உத்தரவிட்டுள்ளார்.

5 நிதி நிறுவனங்களின் முகாமையளார்களுக்கே மேலதிக நீதவான் மேற்கண்டவாறு நேற்றுச் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.

விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அநுர சேனநாயக்க, எதிர்வரும் 26ஆம் திகதி வியாழக்கிழமை வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் பிரகாரம், நபரொருவரின் வங்கிக் கணக்குத் தொடர்பிலான அறிக்கை தேவையென்று, குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டதையடுத்தே, நீதவான் மேற்கண்டவாறு கட்டளையிட்டார்.  

பிரபல றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் கொலை தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அநுர சேனநாயக்க, நாளை 26ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நாரஹேன்பிட்டிய பொலிஸ் நிலையப் போக்குவரத்துப் பிரிவுக்கான பொறுப்பதிகாரியும் (ஓ.ஐ.சி), நாளை 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .