2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

தொண்டமானுக்கு 3 மாத லீவு

Thipaan   / 2016 ஜூன் 07 , பி.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜ்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான், சபை நடவடிக்கைகளில் பங்கேற்காமல் இருப்பதற்கு, சபை அனுமதியளித்தது.

நாடாளுமன்றம், சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை (07) கூடியது. சபையின் பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் எழுந்த இ.தொ.கா தலைவரும் எம்.பியுமான முத்து சிவலிங்கம், ஆறுமுகன் தொண்டமானுக்கான விடுமுறை யோசனையை முன்மொழிந்தார். அந்த யோசனையை, நுவரெலியா மாவட்ட எம்.பி சீ.பீ.ரத்நாயக்க வழிமொழிந்தார். அதை சபையும் அங்கிகரித்தது. அதனடிப்படையில், ஆறுமுகன் தொண்டமான் எம்.பி, நேற்றிலிருந்து (07), தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு சமூகமளிக்காமல் இருக்க சபை அங்கிகாரமளித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .