Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 டிசெம்பர் 30 , மு.ப. 10:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அஸ்லம் மௌலானா
புதிய அரசியலமைப்பு சீர்திருத்தத்தில் சிறுபான்மைச் சமூகங்களின் உரிமைகள் மற்றும் நலன்களை உறுதிப்படுத்தும் வகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும் ஒருமித்த கருத்துகளை முன்வைப்பதற்கு இன்றைய சந்திபில் இணக்கம் காணப்பட்டதுடன், இது தொடர்பில் சில விடயங்கள் ஆராயப்பட்டதாகவும் அச்சந்திப்பில் கலந்துகொண்ட ஒருவர் தெரிவித்தார்.
மேலும், இது தொடர்பில் தொடர்ந்தும் சந்தித்து விரிவாகக் கலந்துரையாடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையிலான சந்திப்பு, எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்றது.
மேலும், கல்முனை உட்பட கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் நிலவி வருகின்ற தமிழ், முஸ்லிம் முரண்பாடுகளை சுமூகமாக தீர்க்கும் பொருட்டு உள்ளூர்மட்டத் தலைமைகள் மத்தியில் பேச்சுகளை முன்னெடுப்பதற்கும் இச்சந்திப்பில் இணக்கம் காணப்பட்டதாகவும் அவர் கூறினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அதன் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், பிரதிச் செயலாளர் நாயகம் எம்.நிஸாம் காரியப்பர், சர்வதேச விவகாரங்களுக்கான பணிப்பாளர் ஏ.எம்.பாயிஸ் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.
21 minute ago
30 minute ago
42 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
30 minute ago
42 minute ago
51 minute ago