Editorial / 2026 ஜனவரி 01 , மு.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

பண்டாரகம-கெஸ்பேவ சாலையில் வெல்மில்லவில் உள்ள கல்கடே சந்திப்பில் பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், மற்றொருவர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தேசிய மக்கள் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட உறுப்பினர் பதவிக்கான வேட்பாளர் ஓய்வுபெற்ற பிரிகேடியர் எச்.எம். சரத் விஜேசேன உயிரிழந்துள்ளார். அவர் இரண்டு குழந்தைகளின் தந்தை. ஓய்வுபெற்ற கேணல் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் தனியார் பேருந்துடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இறந்த பிரிகேடியர் மற்றும் காயமடைந்த கேணல், வணிக நோக்கத்திற்காக காலிக்குச் சென்று, பண்டாரகம-கெஸ்பேவ சாலையில் தங்கள் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, ஸ்ரீ ஜெயவர்தனபுர மருத்துவமனையின் ஊழியர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து ஒன்று நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
6 minute ago
37 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
37 minute ago
2 hours ago