2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

த.வெ.க தலைவர் விஜய் கைது? வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு

Janu   / 2025 செப்டெம்பர் 28 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னையில் உள்ள த.வெ.க தலைவர் விஜயின் வீட்டுக்கு காவல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கரூரில் நடந்த கோர சம்பத்தை தொடர்ந்து, அவரது வீட்டுக்கு பாதுகாப்பு கூடுதலாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

நீலாங்கரையில் உள்ள விஜயின் வீட்டுக்கு ஒரு காவல் ஆய்வாளர் தலைமையில் 15 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று இரவு முதல்  இந்த நடவடிக்கையை எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக மத்திய அரசு அவருக்கு ஏற்கனவே 'Y' பிரிவு பாதுகாப்பை வழங்கி உள்ளது.

விஜய் வீடு இருக்கும் பகுதிக்கு சந்தேகப்படும் வகையில் வரும் அனைவரையும் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மேலும் விஜய் வீட்டின் அருகே சாலைத் தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னை நீலாங்கரையில் விஜய் தற்போது தங்கி உள்ள அவரது வீடு உள்ள வீதியின் இருபுறமும் தடுப்புகள் அமைத்து பொலிஸார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X