2026 ஜனவரி 16, வெள்ளிக்கிழமை

நாகவிகாரையில் ஜனாதிபதி வழிபாடு

Editorial   / 2026 ஜனவரி 16 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதர்ஷன் வினோத் 

யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொன்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நயினாதீவுக்கு சென்று , நாக விகாரை விகாரதிபதியை சந்தித்து ஆசிகளை பெற்றுக்கொண்டார். 

 
ஜனாதிபதி தன்னிடம் நேரில் வரவில்லை என அண்மையில் நயினாதீவு நாக விகாரை விகாராதிபதி அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில் ,  ஜனாதிபதி விகாரதிபதியை வௌ்ளிக்கிழமை (16)  சந்தித்து ஆசி பெற்றுள்ளார். 
 
அதேவேளை , தையிட்டி விகாரை பொறுப்பை தன்னிடம் தந்தால் , விகாரை அமைந்துள்ள சுமார் 1.2 ஏக்கர் தனியார் காணிகளுக்கு மாற்றீடாக , தையிட்டி விகாரைக்கு சொந்தமான காணிகளில் மாற்று காணிகளை வழங்கி தையிட்டி விகாரை பிரச்னைக்கு தீர்வு வழங்க தயார் என அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்துடன் , தையிட்டி பகுதிக்கு நேரில் சென்று , பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்களை நேரில் சந்தித்தும் நயினாதீவு விகாராதிபதி கருத்துக்களை தெரிவித்து இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.  

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X