2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

நகைக் கொள்ளை: நால்வர் கைது

George   / 2016 ஒக்டோபர் 16 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

புறக்கோட்டையிலுள்ள தங்கநகை ​வேலைத்தளத்தை உடைத்து  3 2/1 கோடி ரூபாய் பெறுமதியான நகைகளை கொள்ளையடித்த சந்​தேகநபர்கள் 4 பேர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை கோகாலை பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யும்போது, 60 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கநகைகளை கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கும் இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புள்ள உள்ளதாகவும் கொள்ளையிடப்பட்ட தங்க நகைகள், வங்கிகள் பலவற்றில் அடகு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

பொலிஸ் கான்ஸ்டபிள் உள்ளிட்ட இன்னும் சில சந்தேகநபர்களை தேடிவருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .