2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

நடிகைக்கு ஓராண்டு சிறைத் தண்டனை

Freelancer   / 2025 ஜூலை 18 , மு.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

தங்க கடத்​தல் வழக்​கில் நடிகை ரன்யா ராவுக்கு பிணையில் வெளியே வர முடி​யாத, ஓராண்டு சிறை தண்டனை விதித்து பெங்​களூர் சிறப்பு நீதி​மன்​றம் உத்​த‌ர​விட்​டுள்​ள‌து. 

கர்​நாடக பொலிஸ் டி.ஜி.பி. ராமசந்​திர ராவின் வளர்ப்பு மகளும், நடிகை​யு​மான‌ ரன்யா ராவ் (வயது 32) டுபா​யில் இருந்து 14.8 கிலோ தங்​கம் கடத்தி வந்​த​தாக‌ கடந்த மார்ச்​சில் பெங்​களூர் சர்​வ​தேச விமான நிலை​யத்​தில் கைது செய்​யப்​பட்​டார்.

அவரது வீட்​டில் நடத்​திய சோதனை​யில் 2.8 கோடி இந்திய ரூபா மதிப்​பிலான தங்​க​மும், 2.4 கோடி இந்திய ரூபா ரொக்​க​மும் சிக்​கின. வரு​வாய் புல​னாய்வு இயக்குநரக அதி​காரி​கள், அவர் மீது சட்​ட​விரோத தங்க கடத்​தல் மற்​றும் அந்​நிய செலா​வணி மோசடி ஆகிய சட்டப்​பிரிவு​களில் வழக்​குப்​ப​திவு செய்​தனர். இவ்​வழக்கு பெங்​களூரு​வில் உள்ள பொருளா​தார குற்​றங்​களுக்​கான சிறப்பு நீதி​மன்​றத்​தில் நடை​பெற்று வந்​தது.

இந்​நிலை​யில் நீதி​மன்​றம், தங்க கடத்​தல் வழக்​கில் ர‌ன்யா ராவ் மீதான குற்​றச்​சாட்​டு​கள் வரு​வாய் புல​னாய்வு இயக்​குநரக அதிகாரி​கள் தரப்​பில் ஆதா​ரத்​துடன் நிரூபிக்​கப்​பட்டுள்​ளன. எனவே அவருக்கு சட்​ட​விரோத தங்க கடத்தல் மற்​றும் அந்​நிய செலா​வணி மோசடி ஆகிய சட்டப்​பிரிவு​களின்​கீழ் ஓராண்டு சிறை தண்​டனை விதிக்​கப்​படு​கிறது என்று உத்​தர​விட்டுள்ளது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X