2025 டிசெம்பர் 07, ஞாயிற்றுக்கிழமை

நாட்டை வந்தடைந்த இந்தியாவின் 9 ஆவது நிவாரணப் பொதி

Freelancer   / 2025 டிசெம்பர் 07 , மு.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவிடமிருந்து அனுப்பப்பட்ட 9 ஆவது மனிதாபிமான உதவிப் பொருள்கள், நேற்று பிற்பகல் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தன.
 
அவசர உதவியின் ஒரு பகுதியாக, இந்த சிறப்பு விமானம் 65 மெட்ரிக் தொன் எடையுள்ள 110 அடி நீள பெய்லிப் பாலத்தையும், ஒரு ஜே.சி.பி. பெக்கோ லோடர் இயந்திரத்தையும் ஏற்றி வந்தது.
 
இந்த பொதியுடன் இந்திய இராணுவ பொறியியலாளர் படையைச் சேர்ந்த 13 பொறியியலாளர்கள் உதவி வழங்குவதற்காக வந்துள்ளனர்.
 
இந்த நிவாரணப் பொதியை அதிகாரப்பூர்வமாகப் பெற்றுக்கொள்வதற்காக, இந்திய உயர்ஸ்தானிகரக அதிகாரிகள் மற்றும் இலங்கை இராணுவ பொறியியலாளர் படையைச் சேர்ந்த அதிகாரிகள் குழு ஒன்று விமான நிலையத்தில் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X